தாந்தோன்றிமலையில் திருப்பவித்ரோத்ஸவ விழா
ADDED :5141 days ago
கரூர்: கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி திருக்கோவிலில் நடந்த திருப்பவித்ரோத்ஸவ விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பிரசித்தி பெற்ற தாந்தோன்றிமலை வெங்கட்ரமண ஸ்வாமி கோவிலில் கடந்த 7 ம் தேதி காலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் திருப்பவித்ரோத்ஸவ விழா வெகு சிறப்பாக தொடங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு புண்யயாஹம், அக்னிப்ரணயனம், கும்ப ஆராதனம் மற்றும் மஹா சாந்தி ÷ஷாமம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை (9 ம் தேதி) கடம் பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. அதை தொடர்ந்து மஹா திருப்பாவாடை நைவேத்யம், புஷ்பாஞ்சலி, ப்ரம்ம கோஷம் சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.