திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சதுர்த்தி பூஜை
ADDED :3697 days ago
திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்திலுள்ள விநாயகருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.இது போல் நத்தம் கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.