தேவிபட்டினம் புனித சவேரியார் ஆலய தேர்பவனி விழா
ADDED :3430 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் புனித சவேரியார் ஆலய விழாவை முன்னிட்டு கூட்டு திருப்பலி, தேர் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் சொரூபம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேர் பவனியையொட்டி சவேரியார் ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.