கோவில் தெப்பக்குளத்தை தூர்வார பக்தர்கள் கோரிக்கை
ADDED :3396 days ago
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டையில், சந்திரசூடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பகுளம் உள்ளது. கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், கை, கால் கழுவவும், குளிக்கவும், விநாயகர் சதுர்த்தியின் போது, சிலைகளை கரைக்கவும் தெப்பக்குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தெப்பக்குளம் தூர் வாரப்படாமல் உள்ளதால், தண்ணீரில் குளிக்கும் பக்தர்களுக்கு அரிப்பு ஏற்படுகிறது. அத்துடன் தெப்பக்குளத்தில் வைத்து மது அருந்தும் குடிமகன்கள், பாட்டில்களை உடைத்து, தெப்பக்குளத்திற்குள் வீசி விடுவதால், பக்தர்கள் மிகவும்சிரமப்பட்டு வருகின்றனர்.