காரைக்கால் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
ADDED :3738 days ago
காரைக்கால்: காரைக்கால் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர்பவனி நடந்தது. காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து ஆலய பங்கு குரு அந்தோணி லுார்துராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து, தினம் சிறிய தேர்பவனி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மின் அலங்காரத் தேர் பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்கு குருக்கள் தலைமையில் புனித அந்தோணியார் இளைஞர் கூட்டமைப்பினர் செய்தனர்.