ரவீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3394 days ago
சென்னை: பழமை வாய்ந்த மரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை வியாசர்பாடியில், பழமை வாய்ந்த மரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. பலவித மலர் அலங்காரங்களுடன் பிரம்மாண்ட தேரில், சுவாமி அம்மன் எழுந்தருள வடம் பிடித்து இழுத்து வந்தனர்.இதில் சங்க நாதமும், சண்டைமேள வாத்திய இசையை முழங்கி ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் உலா வந்து தரினம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.