உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, 52 நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவிலில், வராஹி அம்மன், தனி சன்னிதியில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் கடந்த, 13 ஆண்டுகளாக வராஹி அம்மனுக்கு, ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, ஆஷாட நவராத்திரி விழா, 4ம் தேதி துவங்கியது. 14ம் தேதி வரை நடைபெறும். விழாவில், தினமும் காலை, 8:00 மணிக்கு சிறப்பு வராஹி ஹோமமும், 10:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு நடக்கும் இசை நிகழ்ச்சியில், நேற்று முன்தினம் ஆண், பெண் நாதஸ்வர இசைக்கலைஞர்கள், 52 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !