அரசநகரியில் நாளை கும்பாபிஷேகம்
ADDED :3406 days ago
பரமக்குடி, : பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரசநகரி கிராமத்தில் கலைச்செல்வி அழகுமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நேற்று காலை 9 மணிக்கு அனுக்கை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமம் நிறைவடைந்து பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு புனித குடங்களில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, மாலை 5 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் காலயாகபூஜைகள் நடந்தன. இன்று காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி கண்ணன், விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.