உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் சீரமைப்பு

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் சீரமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த சித்தாலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீபால வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், திருப்பணி துவக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், மாகறல் அருகே அமைந்துள்ளது சித்தாலப்பாக்கம் கிராமம். இங்கு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீபால வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோவிலை பக்தர்கள் உதவியுடன், சீரமைக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ரகுநாதன் முடிவு செய்தார். கிராம மக்கள் ஒத்துழைப்போடு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட உள்ளது.திருப்பணி துவக்க விழா மற்றும் பாலாலயம், கடந்த 8ம் தேதி காலை நடந்தது. திருப்பணியை முடித்து, நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலாலயத்தில், கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !