உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம்

திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், நேற்று தேரோட்டம் நடந்தது. திருநீர்மலையில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோவில், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு, நீர்வண்ண பெருமாள்; நின்றான் -ரங்கநாத பெருமாள்; கிடந்தான் - உலகளந்த பெருமாள்; நடந்தான் - சாந்த நரசிம்மர்; இருந்தான் என, நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார். கோவிலில், ஆண்டிற்கு இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில், தேரோட்டம் நடைபெறும். அதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த தேர் பழுதடைந்ததால், 45 அடி உயரம், 17 அடி அகலத்தில், 220 அழகிய மரச் சிற்ப வேலைப்பாடுகளுடன் தேக்கு மரத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. நேற்று காலை, 6:30 மணிக்கு, பிரம்மோச்சவத்தில், தேரோட்ட விழா நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !