உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குளித்தலை: வேங்கடதான்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த வேங்கடதான்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், கருப்பசாமி, விநாயகர் போன்ற கோவில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, கலசங்கங்களுக்கு புனிதநீரை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் அர்ச்சகர் பிச்சுமணி சிவாச்சாரியார் குழுவினர் ஊற்றினர். பின்னர் காளியம்மன், மாரியம்மன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், குளித்தலை எம்.எல்.ஏ., ராமர், முன்னாள் எம்.எல.ஏ., மாணிக்கம், தோகைமலை வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !