சாயிபாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா
ADDED :3366 days ago
புதுச்சேரி: காலாப்பட்டு சாயிபாபா கோவிலில், குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தன. காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் சீரடி சாயி நகரில் உள்ள சீரடி சாயிபாபா கோவிலில், குருபூர்ணிமா விழா நேற்று நடந்தது. காலை 8:00 மணி மணிக்கு கொடியேற்றம், 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் அதை தொடர்ந்து ஸ்ரீசாய சத்சரித்திர பாராயணம், 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம் நடந்தது. தொடர்ந்து, சாயிபாபாவிற்கு ஆரத்தியும், ஆராதனையும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, ராஜன் மற்றும் கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜன்ஸ், மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு ஆரத்தி, அதை தொடர்ந்து பாபா சாவடி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சாயிபாபா சேவா சமிதியினர் செய்திருந்தனர்.