உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை

வால்பாறை கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜை

வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை வாழைத்தோட்டம்  காமாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆடிமாத பவுர்ணமியையொட்டி கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது.  இதே போல் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர், துர்க்கை அம்மனுக்கு நேற்று ஆடி மாத சிறப்பு பூஜை  நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி மாத சிறப்பு பூஜையில் பக்தர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !