பொருவளூர் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்
ADDED :3480 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் தீ மிதி விழா நடந்தது. பொருவளூர் நரிக்குறவர் தெருவில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் மற்றும் மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் இளங்கருமாரியம்மனுக்கு, நேற்று சாகை வார்த்தல் நடந்தது. இதையொட்டி, தென்பெண்ணையாற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. மதியம் சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. நரிக்குறவர் தெருவில் உள்ள ஆதிமுத்துமாரியம்மனுக்கு, மாலை தீமிதி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.