பாண்டுரங்க ருக்மணி சுவாமி பிரம்மோற்சவ மலர் வெளியீடு
ADDED :3480 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாண்டுரங்க ருக்மணி சுவாமி பிரம்மோற்சவ மலர் வெளியீட்டு விழா நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள அக்ரஹாரம் சிவாஜி நகரில், பாண்டுரங்க ருக்மணி சுவாமியின், 80வது ஆண்டு சப்தா பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த, 15ம் தேதி துவங்கிய இந்த விழா, நாளை (ஜூலை, 21) வரை நடக்கிறது. நேற்று நடந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பிரம்மோற்சவ மலர் வெளியிடப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரம் ஞானேஸ்வர் துளிதாஸ் நாமதாஸ் மகராஜ் மலரை வெளியிட, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுந்தரம் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து விஜயலட்சுமி சுந்தரம் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.