வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :3377 days ago
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அதிகாலையில் சுவாமி , தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் திருமஞ்சன வழிபாடு நடந்தது. தொடர்ந்து தேர் எழுந்தருளல் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் தேரை வடம்பிடிக்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் எதிர்சேவை செய்து சுவாமியை வரவேற்றனர். மாலையில் சென்னை சட்டநாத பாகவதர் குழுவினரின் நமசங்கீர்த்தன வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை பக்தசபா செயலாளர் நாராயணன், நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன் செய்தனர்.