உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேர்ப்புளியில் கோயிலில் 259 கிடாக்கள் வெட்டி விருந்து

வேர்ப்புளியில் கோயிலில் 259 கிடாக்கள் வெட்டி விருந்து

குஜிலியம்பாறை: வேர்ப்புளி கருப்பணசாமி கோவிலில், 259 கிடாக்கள் வெட்டி விருந்து வைக்கப்பட்டது. ஆர்.கோம்பை ஊராட்சி தாதனுார் அருகே உள்ள வேர்ப்புளியில், வந்தவெளி கருப்பணசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், நேர்த்தி கடன் நிறைவேறும் பட்சத்தில் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டுக்கிடா வழங்குவர். நடப்பு ஆண்டு திருவிழாவில் 259 ஆட்டு கிடாக்களை பக்தர்கள் கோயிலுக்கு வழங்கினர். இந்த கிடாக்களை நேற்று முன்தினம் இரவே வெட்டி, 50 சமையல் கலைஞர்களை கொண்டு விருந்து வைத்தனர். நேற்று காலை முதல் இரவு வரை அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !