திண்டிவனத்தில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3461 days ago
திண்டிவனம்: திண்டிவனம் இலுப்பதோப்பு (குட்டகரை) நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை செல்லும் சாலையில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் உற்சவம், கடந்த வாரம் துவங்கியது. விழாவையொட்டி, தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக புஷ்ப விமானத்தில் அம்மன் வீதியுலா, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.