மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு
ADDED :3402 days ago
மேட்டுப்பாளையம்: ஆடிக்குண்டம் விழாவை அடுத்து, அம்மனுக்கு பெண்கள் மாவிளக்கு படைத்து வழிபாடு செய்தனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா நடைபெற்று வருகிறது. நேற்று தேக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன் புதுார், தாசனுார், அம்மன்நகர், வேல் நகர், காந்திநகர், கூடுதுறைமலை, அண்ணாநகர், சமயபுரம், உப்புப்பள்ளம் உள்ளிட்ட கோவிலைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தாரை, தப்பட்டை மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மன் முன்பு படைத்து வழிபாடு செய்தனர். கோவில் பூசாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜை செய்தார். மாவிளக்கு வழிபாடு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.