உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாண்டுகுடியில் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்!

பாண்டுகுடியில் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம்!

திருவாடானை : திருவாடானை அருகே பாண்டுகுடியில் லெட்சுமி நாராயணபெருமாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக காலையில் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பகல் ஒரு மணியளவில் நாராயணபெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியுடன் திருமணகோலத்தில் காட்சியளித்தார். வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. மதுரை, பாண்டுகுடியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை தரிசித்து சென்றனர். மாலையில் ஊஞ்சல் உற்சவம், திருவீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !