சின்மயா மிஷன் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா
ADDED :3399 days ago
மதுரை: மதுரை டோக் நகர் சின்மயா மிஷன் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. காலை ௭.௦௦ மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் துவங்கியது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், சஹஸ்ரநாம அர்ச்சனை, ராமகிருஷ்ண குழு வினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.