உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாச்சத்திரம் காலபைரவர் கோவிலில் அஷ்டமி பெருவிழா!

அம்மாச்சத்திரம் காலபைரவர் கோவிலில் அஷ்டமி பெருவிழா!

கும்பகோணம்: கும்பகோண த்தை அடுத்த அம்மாச்சத்திரம் காலபைரவர் கோவிலில் இன்று அஷ்டமி பெருவிழா நடைபெறவுள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான 88 திருக்கோவில்களில் ஒன்றாக விளங்குவது அம்மாச்சத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரீஷிவரரர் திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவனை பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், கிரது, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய 7 பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால், இத்தல சுவாமிக்கு சப்தரிஷிஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளது. தலத்தில் எழுந்தருளியுள்ள அம்பாள் ஸ்ரீ ஞானம்பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். எந்த தலத்திலும“ இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக கரம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குப வதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும். இப்பைரவை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோ ஷத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்த காலபைரவருக்கு இன்று மாலை 6 மணிக்கு அஷ்டமி பெருவிழா சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வடமாலை அணிவித்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !