ராமகிருஷ்ண தபோவன ஆண்டு விழா ராமேஸ்வரத்தில் மாணவர்கள் ஊர்வலம்
ராமேஸ்வரம்: திருச்சி ராமகிருஷ்ண தபோவன 75ம் ஆண்டு விழாவையொட்டி (5.8.16) வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் விவேகானந்தர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர், சித்பவானந்தர் உருவ படத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் அணிவகுத்து சென்றன. தொடர்ந்து நடந்த விழாவில், ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சதானந்த மகராஜ், துணை தலைவர் சுத்தானந்த மகராஜ், பொருளாளர் பரானந்த மகராஜ், திருவேடகம் விவேகானந்தர் பள்ளி செயலாளர் பரமானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினர். 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் விவேகானந்தர் பள்ளி தாளாளர் சாரதானந்தா, கோயில் தக்கார் குமரன் சேதுபதி, டி.எஸ்.பி., முத்துராமலிங்கம், நகராட்சி தலைவர் அர்ச்சுணன் , கல்லுாரி பேராசிரியர் இன்சுவை வாழ்த்தி பேசினர். வாழும் கலை அமைப்பு தலைமை பாடகர் முருகதாசின் பக்தி இன்னிசை நடந்தது.