உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்

கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி தீவிரம்

கடலூர்: கடலூர் வண்டிப்பாளையத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  கடலூர், வண்டிப்பாளையம் பகுதியில்  நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் பொம்மைகளை பல விதமான வகைகளில் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர். இங்கு, தயாரிக்கப்படும் பொம்மைகள் சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இதுகுறித்து தொழிலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் 30  ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம்.  இங்கு, தயாரிக்கப்படும் பொம்மைகளை பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !