கமுதி அம்மன் கோயில்களில் ஆடித்திருவிழா
ADDED :3373 days ago
கமுதி: கமுதி அருகே கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. அம்மன் பூப்பல்லக்கு, ரதத்தில் வீதியுலா வந்தார்.
பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கமுதி மேட்டுதெரு ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜை, கரகாட்டம், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.