உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

எல்லையம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பெண்ணாடம்: ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையையொட்டி, பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவி லில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால்  அபிஷேகம், 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்து  வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !