உத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோயில் விளக்கு பூஜை
ADDED :3384 days ago
ராமநாதபுரம், :ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் உத்தரகோசமங்கையில் வராஹி அம்மன் கோயில் உள்ளது. இங்கு உலக நன்மை வேண்டி 22 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் மங்களப்பட்டர், வேலுப்பட்டர் செய்தனர்.