திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பூணூல் மாற்றும் வைபவம்
ADDED :3382 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, குளக்கரையில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜெபித்து, பூணூல் மாற்றிக் கொண்டனர். இதில் அருணாசலேஸ்வரர் கோவில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள் மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்றனர்.