உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆக. 22 முதல் ஆவணி திருவிழா கோலாகலம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆக. 22 முதல் ஆவணி திருவிழா கோலாகலம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா ஆக., 22 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக., 31 ல் தேரோட்டம்.12 நாட்கள் திருவிழா நடக்கிறது. கொடியேற்றத்தன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1:30க்கு விஸ்வரூப தீபாராதனை. 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். காலை 5:00 -- 5:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பின் கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு அப்பர் சுவாமிகள்

தங்கசப்பரத்தில் வீதிகளில் உழவாரப்பணிகள் முடித்து இரவு 7:00 மணிக்கு கோயில் வந்து சேர்கிறார். ஆக., 26 ல் 5ம் நாளில் வெள்ளி சப்பரத்தில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடக்கிறது. பின் சுவாமியும் அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர். ஏழாம் நாளான ஆக., 28 ல் அதிகாலை 4:30 மணிக்கு சண்முகருக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 4:00 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 29 ல் மாலை சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் வீதியுலா வருகிறார். ஆக., 31 ல் காலை 6:30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். பின் ரத வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. செப்., 2 ல் மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகின்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !