திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
ADDED :3659 days ago
திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சார்ச்சனை நேற்று துவங்கியது.காலையில் உற்சவர் சித்தி விநாயகர் முன் மகா கணபதி ஹோமம் முடிந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் லட்சார்ச்சனை துவங்கியது. செப்.,4 வரை மாலை 6:15 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. செப்.,5 காலை மகா கணபதி ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகளும், மாலையில் சுவாமி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.