உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்

உடுமலை: இந்து மக்கள் கட்சி சார்பில் உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் புங்கமுத்துார், சின்னபொம்மன்சாலை, கரட்டூர், பட்டணம், பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், சுங்காரமுடக்கு, வல்லக்குண்டாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட, 29 இடங்களில், மூன்றரை அடி முதல் 9 அடி வரை மான், மயில், சிங்கம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிலையில் விநாயகர் விசர்ஜன ஊர்வல துவக்க விழா, பெதப்பம்பட்டி நால் ரோட்டில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார்.

ஊர்வலத்தை கோவை மாவட்ட மகளிரணி தலைவி மலர்க்கொடி துவக்கி வைத்தார். மாவட்டத்தலைவர் சக்திவேல், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில், மாவட்ட தொழிற்சங்கத்தலைவர் செந்தில்குமார், மாநில செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணன் உட்பட பலர் பேசினர். ஊர்வலம், குடிமங்கலம் ஒன்றிய முக்கிய கிராமங்கள் வழியாக, உடுமலை குட்டைத்திடலை அடைந்தது. அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. சின்னபொம்மன்சாலை, புங்கமுத்துார், கரட்டூர், பட்டணம் பகுதிகளில் வைக்கப்பட்ட ஐந்து விநாயகர் சிலைகள் ஒன்றியத்தலைவர் பாலு தலைமையில் சின்னபொம்மன் சாலையில் புறப்பட்டு பாலாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !