உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமாம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா

பெரியமாம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா

தியாகதுருகம்: பெரியமாம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் உள்ள பெரியமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 27ம் தேதி துவங்கியது. தினமும், கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நடந்தது. கடந்த 4ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் தீமிதி உற்சவமும் நடந்தது. மாலை 5:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, வடம் பிடித்தனர். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், பேரூராட்சி கவுன்சிலர் சுப்ரமணியன், அவைத்தலைவர் அய்யம்பெருமாள், தே.மு.தி.க., நகர செயலாளர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !