உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணிமூல விழாவில் பங்கேற்க.. குன்றத்து முருகன் செப்.10ல் புறப்படுகிறார்!

ஆவணிமூல விழாவில் பங்கேற்க.. குன்றத்து முருகன் செப்.10ல் புறப்படுகிறார்!

திருப்பரங்குன்றம்: மதுரை ஆவணிமூலத்திருவிழாவில் பாண்டிய ராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்திலிருந்து செப்., 10ல் புறப்பாடாகிறார். கோயில் கருப்பண சுவாமிக்கு பூஜைகள் முடிந்து, தெய்வானைக்கு சுவாமி காப்பு கட்டி தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயில் சென்றடைவார். இரவு நரியை பரியாக்கும் நிகழ்ச்சியில் மதுரை சுவாமிகளுடன் பங்கேற்பார். புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையிலும் சுவாமி கலந்து கொண்டு செப்., 15ல் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !