உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையப்பபுரம் கோயிலில் நவராத்திரி தசரா விழா துவக்கம்

திருமலையப்பபுரம் கோயிலில் நவராத்திரி தசரா விழா துவக்கம்

ஆழ்வார்குறிச்சி : திருமலையப்பபுரம் மங்கை நாயகி அம்பாள் கோயிலில் நவராத்திரி தசரா திருவிழா துவங்கியது. திருமலையப்பபுரம் மங்கைநாயகி அம்பாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தசரா திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. பத்து நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 9 மணியளவில் தீபாராதனை, பூஜை நடைபெறும். முதல் நாள் பூஜையை ராமசாமி, இரண்டாம் நாள் பூஜையை சுடலைமுத்து நடத்தினர். மூன்றாம் நாளான இன்று (29ம் தேதி) பூஜையை கனகசபாபதி, நான்காம் நாள் பூஜையை பெரியசாமி ஆசாரி, கிருஷ்ணன் ஆசாரி, ஐந்தாம் நாள் பூஜையை ராஜேந்திரன், ஆறாம் நாள் பூஜையை சிவசுப்பிரமணியன் மற்றும் சகோதரர்கள், ஏழாம் நாள் பூஜையை பாலகோபாலன், எட்டாம் நாள் பூஜையை கருணாகரன் மற்றும் சகோதரர்கள், ஒன்பதாம் நாள் பூஜையை சுப்பிரமணியன் மற்றும் சங்கர சீனிவாசன் நடத்துகின்றனர். 10ம் நாளான அக்.6ம் தேதி மாலை 3.30 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 10 மணி அலங்கார தீபாராதனை, இரவு 11 மணி அம்பாள் நகர்வலம் வருதல், 2 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அன்று பூஜையை கஜேந்திரவரதராசன், ஜெயபாலசுப்பிரமணியன் நடத்துகின்றனர். 11ம் நாளான 7ம் தேதி திருக்கல்யாணம் சிவசுப்பிரமணியன், செல்வசங்கர் சார்பில் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !