உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதிய தேரில் விரிசல்: அறநிலையத்துறை கவனிக்குமா?

புதிய தேரில் விரிசல்: அறநிலையத்துறை கவனிக்குமா?

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், புதிதாக செய்யப்பட்ட மரத்தேரில், விரிசல் ஏற்பட்டுள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், 2014ல், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய மரத்தேர் செய்யப்பட்டது. ஆனால், தேர் செய்து, இரு ஆண்டுகளுக்கு மேலாகியும், தேர் வெள்ளோட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், கோவில் முன்புறம் உள்ள தகர கொட்டகையில், தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேரில் பெரும்பாலான சிற்பங்களின் பாகங்கள், விரிசல் விட்டுள்ளன. இதனால், பழைய தேர் போல், காட்சியளிக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள், தேரை சரிசெய்து, வெள்ளோட்டம் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !