உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை!

சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை!

பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவில் மூலவர் பெருமாள், திருப்பதி திருமலையப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பண்ருட்டி அடுத்த திருவதிகையில், ஹேமாம்புஜவல்லித் தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவில்  அமைந்துள்ளது.  இங்கு, புரட்டாசி மாதத்தின் இரண்டாம்  சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் பெருமாள், திருப்பதி திருமலையப்பன் அலங்காரத்தில், நெய்தீப தரிசனத்தில் அருள்பாலித்தார். விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதம், 6:15 மணிக்கு,  கோபூஜை, விஸ்வரூப தரிசனம், 7:00 மணி முதல், 8:30 மணிவரை தோமாலை சேவை, 9:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம்  நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !