உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 விநாயகர் கோயிலில் நட்சத்திர பரிகார மரக்கன்றுகள்

108 விநாயகர் கோயிலில் நட்சத்திர பரிகார மரக்கன்றுகள்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை சோலையாக்கும் முயற்சியாக நாளை (செப்., 25) காலை 8:00 மணிக்கு, நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கான பரிகார விருட்சங்களாக அரிய வகை மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் தினமலர் நாளிதழும் இணைந்துள்ளது.திண்டுக்கல்லை சோலையாக்கும் திண்டி மா வனம் திட்டம் கடந்த வாரத்தில் எம்.எம்.முத்தையா அரசினர் கல்லுாரியில் மரக்கன்று நட்டு துவங்கப்பட்டது. இதில் 2,194 மரக்கன்றுகள், 2 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது. அன்று நடந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் நட்ட மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரிக்கவும் உறுதிபூண்டனர். அதேபோல் நாளை காலை, நன்மைதரும் 108 விநாயகர் கோயிலின் கோபால சமுத்திரக்கரையில் 27 நட்சத்திரங்களுக்கான பரிகார விருட்ச மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதில் அமைச்சர் சீனிவாசன், திண்டி மா வனம் குழுவினர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !