உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருக்கோவிலூரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம் பஞ்சாசன பூஜை‚ பஞ்ச ஆவரண பூஜை 64 பைரவ
ஆவாகனம் நடந்தது. ஸ்ரீருத்ரஹோமம் பைரவ மூலமந்திரம் காயத்திரி மந்திரங்களால்
திரவியாகுதி பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகி சம்காரமூர்த்தி மகாபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்‚ மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பள்ளியறை பூஜை சண்டிகேஸ்வரர் பூஜை ஷத்ரபாலபைரவர் பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு கோவிலை 64 முறை வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !