உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா கலயம், சிலைகள் தயார்

ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா கலயம், சிலைகள் தயார்

மேலுார்: மேலுார் அருகே வெள்ளலுார் நாட்டிற்கு உட்பட்ட வெள்ளலுாரில்  ஏழை காத்தம்மனுக்கு கோயில் வீடும், கோயில்பட்டியில் கோயிலும் உள்ளது.

இக்கோயிலில் புரட்டாசி மாத திருவிழா நடக்கும். இதில் பக்தர்கள் நோய் நொடியின்றி வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குழந்தை வரம் உள்ளிட்ட தேவைகளுக்கும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் மதுக்கலயம் சுமத்தல் மற்றும் பதுமைகள் (பொம்மை) செலுத்துவது வழக்கம். இந்த பொம்மைகள் அனைத்தும் கூலிப்பட்டியில் செய்யப்படுகிறது. நேர்த்திக்கடன் பதுமைகள் தயாரிக்கும் துரைச்சாமி கூறியதாவது:  கூலிப்பட்டியில் 30 குடும்பத்தினர் பாரம்பரியமாக இச்சிலைகளை செய்து வருகிறோம். இச்சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதால் ஆவணி 1ம் தேதி முதல் 42 நாட்கள் கடும் விரதமிருந்து உழவன்குளம், மங்கச்சி, தண்டு ஊருணி போன்ற மூன்று கண்மாய் ஊருணி மண் எடுத்து தயாரித்து விற்று வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நேர்த்திக்கடன் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !