விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :3318 days ago
விருதுநகர், விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், விபூதி, பன்னீர் அபிஷேகம் நந்திக்கு நடந்தது. இதன் பின் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பால், பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். விருதுநகர் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். இதுபோல் விருதுநகரில் உள்ள சிவாலயங்கள், மதுரை ரோடு சிவன்கணபதி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.