ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடினர்
ADDED :3401 days ago
ராமேஸ்வரம்: மஹாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், அக்னி தீர்த்த கடலில், லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். ஆண்டுக்கு, ஒரு முறை வரும் புரட்டாசி, மஹாளய அமாவாசையில், தர்ப்பணம் செய்தால், முன்னோர் ஆன்மா சாந்தியடையும் என்பது ஐதீகம்.
மஹாளய அமாவாசையான நேற்று, ராமேஸ்வரம், அக்னி தீர்த்த கடற்கரையில், பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடிய பின், முன்னோர் நினைவாக, திதி பூஜை, தர்ப்பணம் செய்தனர். ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதிகளில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவிபட்டினம், நவபாஷாண கடற்கரையில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம், பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.