மாமல்லபுரத்தில் மஹாளய அமாவாசை மூதாதையர் வழிபாடு
ADDED :3398 days ago
மாமல்லபுரத்தில்:மஹாளய அமாவாசைக்காக, மூதாதையரை வழிபட்டனர். இந்து மத வழக்கப்படி, மஹாளய அமாவாசை நாளில், மூதாதையரை வழிபடுவது வழக்கம். அதன்படி, மஹாளய அமாவாசை நாளான செப்.,30, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் குளம், கடற்கரை ஆகிய இடங்களில், பட்டாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, ஏராளமானோர் தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, வழிபட்டனர்.