புதுச்சேரி மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED :3395 days ago
புதுச்சேரி: மகாளய அமாவாசையான செப்.,30, புதுச்சேரி கடற்கரை மற்றும் கோவில்களில், தங்கள் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.
புரட்டாசி மாதம் பிரதமை முதல், அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் முன்னோர்கள், பூமிக்கு வந்து, நமது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வர் என்பது ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தில், புண்ணிய தலங்கள் மற்றும் கடல், ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது விசேஷம். மகாளய அமாவாசையான செப்.,30, புதுச்சேரி கடற்கரை, குருசுக்குப்பம் கடற்கரைப் பகுதி, வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.