உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் கற்பகவிருட்ச அலங்காரத்தில் சுவாமி உலா!

திருமலையில் கற்பகவிருட்ச அலங்காரத்தில் சுவாமி உலா!

திருப்பதி: திருமலையில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காம் நாளான இன்று(அக்.6) கேட்பவர்க்கு கேட்ட வரமருளும் கற்பகவிருட்ச அலங்காரத்தில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரினசம் செய்தனர்.

திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்கள் முன்னிலையில் பக்தி பாடல்கள் கேட்டபடி தினமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி ஊஞ்சலாடுவார். மலையப்பசுவாமி தேவியருடன் கையில் புல்லாங்குழல் ஏந்திய வேணுகோபாலசுவாமி அலங்காரத்தில் தேவியருடன் ஊஞ்சல் உற்சவராக காட்சி தந்தார். சுவாமி வலம் வரும் போது சோலாப்பூர் கல்லுாரி மாணவியரின் பிரம்மாண்டமான மேளவாத்திய கச்சேரி நடத்தியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !