ரமணர் ஆஸ்ரமத்தில் நவராத்திரி: வெளிநாட்டு பக்தர்கள் வழிபாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில் நடந்து வரும் நவராத்திரி விழாவில், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். திருவண்ணாமலை ரமணர் ஆஸ்ரமத்தில், நவராத்திரி விழா கடந்த, 1ம் தேதி துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு யோகாம்பிகைக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. தினமும் மாலை நேரங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். இன்று, 7ம் தேதி சேஷயணம் அலங்காரம், நாளை, 8 ம் தேதி வேணுகானம் அலங்காரம், 9ம் தேதி சரஸ்வதி அலங்காரம், 10 ம் தேதி மகிஷாசுரமர்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 11ம்தேதி யோகாம்பிகை அன்னையை கர்பகிரகத்தினுள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. நவராத்திரி விழாவில், தினமும் மாலை, 7:00 மணிக்கு நடக்கும் சிறப்பு பூஜையில், வெளிநாட்டை சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து செல்கின்றனர்.