நவசக்தியர் தரிசனம்!
பவுர்ணமி, அமாவாசைகளில் நவசக்திகளை தீபமேற்றி பிரார்த்திக்கிறார்கள். இதன்படி, காஞ்சீபுரம், திருவள்ளுவர் - மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒன்பது சக்தி தலங்களுக்கு, நவசக்தி தீப யாத்திரை என்ற சக்தி வலத்தைக் கன்னிப் பெண்கள், சுமங்கலிகள் செய்து வருகின்றனர். காலை ஏழு மணிக்கு மேலூர் (மீஞ்சூர்) திருவுடைய நாயகி அம்மன் சன்னிதியில் தொடங்கி, திருவொற்றியூர் வடிவுடையம்மன், வடதிருமுல்லை வாயில் கொடியிடையம்மன், திருமுல்லைவாயில் பச்சை அம்மன், வைஷ்ணவிதேவி, தொடர்ந்து திரிசக்கர தரிசன வரிசையில் உள்ள திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், குன்றத்தூர் காத்யாயனி அம்மன், பூவிருந்தவேல்லி தையல் நாயகி அம்மன் ஆகிய ஒன்பது சக்திகளையும் இரவு 8 மணிக்குள் தீபமேற்றி தரிசிப்பார்கள். குறிப்பிட்ட பிரார்த்தனை உள்ள பெண்கள் மஞ்சள் காப்பு, மஞ்சளாடை அணிந்து மூன்று நாட்கள் ஒரு பொழுது விரதம் ஏற்றுச் செல்கின்றனர்.