உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 16 நாள் கொண்டாட்டம்!

16 நாள் கொண்டாட்டம்!

தென்னகத்தில் ஒன்பது நாட்கள் கொண்டாடும் நவராத்திரி விழாவை ஒடிசாவில் 16 நாட்கள் கொண்டாடுவர். இதன் பெயர் ஷோடச பூஜை. ஒன்பதாம் நாளான ஆயுத பூஜையன்று பூரியில் உள்ள ஜகன்நாதரின் சங்கு, சக்கரங்களுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அமாவாசையை அடுத்த ஐந்தாவது நாளை அசுவ பஞ்சமி என்பர். அன்று குதிரைகளைக் குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிட்டு மாலை அணிவித்து, பூஜை செய்வார்கள். அன்று குதிரை கனைத்தால் (ஒலி எழுப்பினால்) அதிர்ஷடம் வரும் என்பர். அதற்கு அடுத்த நாள் கஜ சஷ்டி. அன்று யானைக்களை ஆற்று நீரில் குளிப்பாட்டி பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் யானை பிளிறும் ஒலி கேட்டு மகிழ்வர். அதனால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !