உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலமுண்ட நீலகண்டன்!

ஆலமுண்ட நீலகண்டன்!

எந்த நல்ல காரியத்திலும் கெடுதல் என்று ஒன்று இல்லாமல் போவதில்லை. நல்லவற்றை ஏற்றுக்கொள்ள நான், நீ என்று பலர் முன் வருவார்கள். கெட்டவற்றை ஏற்றுக்கொள்ள ஒரு சில பெரியவர்கள் மட்டும்தான் முன்வருவார்கள்! நீலகண்டப்பெருமானின் திரு உருவப் படமும் அதையே எடுத்துக் காட்டுகிறது.

அமிர்தம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையால், உடன் பிறந்தும் எதிரிகளாகிய தேவாசுரர்கள் இருவரும் கூடி ஒன்றுபட்டுக் கடலைக் கடைந்தார்கள். மலையை மத்தாக ஆக்கினார்கள். நச்சுப் பாம்பை நாணாக ஆக்கினார்கள்; கடலையே கடைந்தார்கள். இத்தகைய மாபெரும் முயற்சியின் பயனாக அமிர்தம் கிடைத்தது. அதோடு கூட ஐராவதம், சசி, திருமகள் முதலிய அரிய பொருள்களையெல்லாம் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அந்தச் சமுத்திரத்தில் தோன்றிய ஆலஹால விஷத்தை ஒருவரும் தனக்கென்று எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. ஆயினும் அப்போது ஜகத் ஸம்ரக்ஷணார்த்தம், ஸர்வஸங்க பரித்யாகம் செய்து, சுடலையிலாடிக் கொண்டிருக்கும் சிவபெருமான்தான் இதற்கென ஓடிவந்தார். வடவைக்கனல் போன்ற கொடிய விஷத்தைத் தம் திருக்கரத்தால் எடுத்து விழுங்கினார். அவருக்கு மட்டும் மனைவி மக்களில்லையா, என்ன? மனைவியான உமை தடுத்ததும், ஆலத்தைக் கழுத்திலேயே அடக்கிக் கொண்டு அகிலத்தைக் காத்ததனால்தான், நீலகண்டன் எனும் திருநாமம் சூட்டப் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !