திருப்பரங்குன்றம் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை!
ADDED :3414 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹார்விபட்டி பால முருகன் கோயிலில் தனி சன்னதியில் மனைவியுடன் எழுந்தருளியுள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜைகள் நடந்தன. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வடுக பைரவருக்கு யாக பூஜைகள் நடந்தன. பாாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கால பைரவர், பாலாஜி நகர் சர்வ சித்தி விநாயகர் கோயிலில் கால பைரவர், சுந்தர் நகர் வெற்றி விநாயகர் கோயிலில் கால பைரவருக்கு பூஜைகள் சிறப்பு அலங்காரம் நடந்தது.