முதல்வர் நலம் பெற வேண்டி யாகம், பால் குடம் ஊர்வலம்
ADDED :3464 days ago
தர்மபுரி: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, தர்மபுரி அடுத்த பல்லக்கொள்ளை காளியம்மன் கோவிலில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு யாகம், பூஜை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க.,வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு, யாக பூஜை, பால்குடம் ஊர்வலம் உட்பட பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நேற்று தர்மபுரி அடுத்த பல்லக்கொள்ளை காளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், பூஜை நடந்தது. இதில், ஆவின் முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.